Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டுப் போட்டி: பேட்மிண்டனின் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய இணை!

ஆசிய விளையாட்டுப் போட்டி: பேட்மிண்டனின் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய இணை!

-

 

ஆசிய விளையாட்டுப் போட்டி: பேட்மிண்டனின் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய இணை!
Photo: DD News

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.

வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளிலும், பல்வேறு பிரிவுகளிலும் சாதனை படைத்து, பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தென்கொரியா இணையை இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி, சீராக் ஷெட்டி இணை எதிர்கொண்டது.

இதில், தென்கொரியா இணையை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய இணை தங்கப் பதக்கம் வென்றது. குறிப்பாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக பேட்மிண்டன் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்

பதக்கப் பட்டியலில் 26 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 101 பதக்கங்களை வென்று இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

MUST READ