Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

-

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!
Photo: BCCI

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது இந்திய அணி.

கழுத்தின் கருமை நீங்க இதை செய்யுங்க!

ராய்ப்பூரில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் 46 ரன்களையும், ஜெய்ஸ்வால் 37 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 35 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்து, தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் மாத்யூ 36 ரன்களையும், ட்ராவிஸ் ஹெட் 31 ரன்களையும், மேட் ஷார்ட் 22 ரன்களையும் எடுத்தனர்.

மழைக்காலங்களில் நாம் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள்!

இந்திய அணி தரப்பில், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

MUST READ