இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!
கவுகாத்தியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 123 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களையும், திலக் வர்மா 31 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர், 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்து, இந்திய அணிய 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்களையும், ட்ராவிஸ் ஹெட் 35 ரன்களையும், மேத்யூ வேட் 28 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.