- Advertisement -

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் துணை கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஷான் கிஷன், ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், ஜித்தேஷ் பிஸ்னோய், அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ்குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி டி20 போட்டியில் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.