Homeசெய்திகள்விளையாட்டுஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம் அணி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம் அணி!

-

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம் அணி!
Photo: ICC

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

உண்மையில் நடந்ததை படமாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்…… ‘ஆர் யூ ஓகே பேபி’ டிரைலர் வெளியீடு!

இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (செப்.15) பிற்பகல் 03.00 மணிக்கு ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், பிரசித், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்….. சொன்னதை செய்து காட்டிய விஜய் தேவரகொண்டா!

அதைத் தொடர்ந்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 121 ரன்களையும், அக்சர் படேல் 42 ரன்களையும் எடுத்தனர்.

டைம் டிராவல் – ஆக்சன் திரில்லர் ‘மார்க் ஆண்டனி’…. திரை விமர்சனம்!

கொழும்புவில் நாளை (செப்.17) நடைபெறும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ