ஐ.பி.எல். போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!
இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியையும், இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியுடன் வெற்றியையும் பெற்றது. கடந்த போட்டியில் லக்னோ அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. இன்றைய போட்டியில் அதனை தொடர லக்னோ விரும்புகிறது.
மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளிடம் தோல்வியையும், பஞ்சாப் அணியிடம் வெற்றியையும் பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பேட்டிங்கில் ரஜத் படிதார் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!
இன்றைய போட்டியில் பெங்களூரு அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.