ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
விஜய் ஆண்டனியின் கலக்கல் நடிப்பில் ரோமியோ… ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…
தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து, விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்தது.
தெலுங்கில் கவனம் செலுத்தும் தனுஷ்… அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43, ருதுராஜ் கெய்க்வாட் 32, மிட்செல் 30 ரன்களை எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சஹர், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ் பாண்டே, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.