ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 06) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
திமுக இளைஞரணி சார்பில் 1000 குளங்கள் சீர் அமைப்பு
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு139 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 64 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களையும் எடுத்தனர்.
சென்னை அணி தரப்பில் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
“தி கேரளா ஸ்டோரி” சமூக அமைதிக்கு சவால் விடும் படம்
சென்னை அணி தரப்பில், கான்வே 44 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.