சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று (மே 08) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.
தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது
வரும் மே 10- ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில், போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த முறை டிக்கெட் விற்பனையின் போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண்கள் சிலர் மயக்கமடைந்தனர். இதைக் கருத்தில் கொண்டு பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் என தனிவரிசைகள் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை சிறப்பு வரிசையில் டிக்கெட் விற்பனை நடைபெறவுள்ளது.
ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபாரம்!
ரூபாய் 1,500, ரூபாய் 2,000, ரூபாய் 2,500 டிக்கெட்டுகள் நேரடியாகவும், இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூபாய் 3,000, ரூபாய் 5,000 டிக்கெட்டுகள் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை வாங்க நள்ளிரவு முதலே கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.