உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியானது
இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
2023- ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, லக்னோ, மும்பை, புனே, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, அக்டோபர் 5ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8- ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19- ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி நியூசிலாந்து- பங்களாதேஷ் இடையேயான போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதேபோல் அக்டோபர் 18 ஆம் தேதி நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேபோல் அக்டோபர் 27 ஆம் தேதி பாகிஸ்தான்ன் – தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியும் சென்னையில் நடைபெறவுள்ளது. குறிப்பாக சென்னையில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.