Homeசெய்திகள்விளையாட்டு"ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை"- கேப்டன் தோனி பேட்டி!

“ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை”- கேப்டன் தோனி பேட்டி!

-

 

"ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை"- கேப்டன் தோனி பேட்டி!
Video Crop Image

பிளே ஆஃப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று (மே 23) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற பிளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டெவான் கான்வே 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களையும் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி, மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி தரப்பில், ஷுப்மன் கில் 42 ரன்களையும், ரஷீத் கான் 30 ரன்களையும் , தசுன் ஷனகா 17 ரன்களையும் எடுத்தனர்.

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தீக்ஷனா, ஜடேஜா, பதிரான தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். சேப்பாக்கம் மைதானம் அருகே ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை

15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. நான்கு முறை ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது.

போட்டிக்கு பின் பேட்டியளித்த கேப்டன் தோனி, “ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. ஓய்வுக் குறித்து முடிவெடுக்க இன்னும் 8 அல்லது 9 மாதங்கள் இருக்கின்றன. ஓய்வு குறித்த தலைவலியை நான் இப்போது எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், விளையாடுவதோ (அல்லது) பயிற்சியோ எப்போதும் நான் சென்னை அணிக்காக மட்டுமே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ