Homeசெய்திகள்விளையாட்டுசென்னை- லக்னோ இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

சென்னை- லக்னோ இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

-

 

Photo: Indian Premier League

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பீகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே 03) பிற்பகல் 03.30 மணியளவில் தொடங்கியது.

டாஸ் வென்று பந்து வீச்சை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்த நிலையில், லக்னோ அணியின் வீரர்கள் பேட்டிங் செய்தனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். அத்துடன், போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எடுத்தது. அந்த அணி தரப்பில், அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 59 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Photo: Indian Premier League

சென்னை அணி தரப்பில் மொயீன் அலி, மாஹீஸ் தீக்ஷனா, மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மழை தொடர்ந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியிலேயே கைவிடப்படுவதாகவும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் லக்னோ அணி இரண்டாவது இடத்திலும், சென்னை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

MUST READ