ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி படுதோல்வியை அடைந்துள்ளது.
குறிப்பாக, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்களையும் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 299 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களையும் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனிடையே, இரண்டாவது இன்னிங்ஸில் அரைச்சதம் அடித்த டேவிட் வார்னர், தனது ரசிகர்களுக்கு அர்ப்பணித்து, டெஸ்ட் போட்டியில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வுப் பெற்றார். போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்கள் தாங்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை, டேவிட் வார்னருக்கு பரிசாக அளித்தனர்.
ஜன.21- ல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு!
மொத்தம் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களை எடுத்துள்ள டேவிட் வார்னர், 26 சதம், 3 இரட்டை சதம், 37 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.