
உலகக்கோப்பைக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக விராட் கோலி, ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நேற்று (அக்.29) நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். ரன் கணக்கைத் தொடங்க சிரமப்பட்ட விராட் கோலி, டேவிட் வில்லி வீசிய பந்தை, இறங்கி வந்து அடிக்க முயன்ற போது ஆட்டமிழந்தார்.
ஒன்பது பந்துகளை சந்தித்த விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடர்களில் முதல்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இதனிடையே, ஆட்டநாயகன் விருதைப் பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா, அனுபவம் வாய்ந்த வீரர்கள், சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடி, ஆட்டதை வென்று கொடுத்திருப்பதாகவும், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.