டி20 உலக்கோப்பை தொடரில் ”சூப்பர் 8” சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற (இந்திய நேரப்படி) ’சூப்பர் 8’ சுற்று 42-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோவ்மன் பவல் தலைமையிலும் இங்கிலாந்து அணியானது ஜாஸ் பட்லர் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள டேரன் சம்மி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களிலும் ஜான்சன் ஜார்லஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 36 ரன்களிலும், ரோவ்மன் பவல் ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 180 ரன்கள் எடுத்தது.
பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டமிழக்க மறுபுறம் களமிறங்கிய பில் சால்ட் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்திலிருந்தார். அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 48 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஆட்டநாயகனாக பில் சால்ட் தேர்வு செய்யப்பட்டார்.