Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்!

-

- Advertisement -

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பல சாதனைகளை முறியடிக்க உள்ள விராட் கோலி!
Photo: BCCI

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து- 8 பேர் உயிரிழப்பு!

அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் துணைக் கேப்டனாக பும்ரா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜெய்ஷ்வால், சுப்மன் கில், பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் உடல்தகுதியை எட்டும் பட்சத்தில் அணியில் சேர்க்கப்படுவர் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15- ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 23- ஆம் தேதியும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7- ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சம நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ