Homeசெய்திகள்விளையாட்டு"ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்"- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

“ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

-

- Advertisement -

 

"ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்"- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!
Photo: BCCI

உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி போன்று எண்ணி தான் விளையாடி வந்தோம். இன்னும் ஒரு போட்டி தான் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆடுகளம் போன்று தற்போது இல்லை. மெதுவான ஆடுகளமாக இருக்கலாம்.

உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இடம் பெற உள்ள சுவாரசிய நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?

எனவே, டாஸ் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்காது. உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விளையாடிய இரண்டு வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களின் அனுபவங்கள் மற்ற வீரர்களை வழிநடத்த உதவும். ஆடும் 11 வீரர்களை இதுவரை முடிவுச் செய்யவில்லை. போட்டிக்கு முன்பு இறுதி முடிவு எடுக்கப்படும். ஆஸ்திரேலியா அணி உடனான போட்டி என்பது கடினமாக இருக்கும். இருப்பினும் எங்களின் அனுபவம், வெற்றியை நோக்கியதாகவே இருக்கும்.

உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்படுகிறார். எங்களுக்கு தேவையான அனைத்து சுதந்திரத்தையும் கொடுப்பதோடு, அனுபவத்தையும் வழங்கி வருகிறார். அவருக்காக உலகக்கோப்பையை வெல்வோம்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

MUST READ