Homeசெய்திகள்இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்... 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

-

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது.

பின்னர் 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 4ஆம் நாளில் அதிரடியாக விளையாடி 462 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ரிஷப் பண்ட் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.  இதனால் நியூசிலாந்துக்கு  107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கி 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இன்று 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

MUST READ