Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி... முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

-

- Advertisement -

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்தியா –  வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர்.

இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். ஜடேஜா, ஜெயஸ்வால் அரை சதம் அடிடித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய வஙகதேச அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் – லிட்டன் தாஸ் ஆகியோர் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடினர். 47.1 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக  ஷகிப் அல்ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்ததார் இதனை தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.

MUST READ