Homeசெய்திகள்விளையாட்டுலக்னோ அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு திரும்பினார் கௌதம் கம்பீர்!

லக்னோ அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு திரும்பினார் கௌதம் கம்பீர்!

-

லக்னோ அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு திரும்பினார் கௌதம் கம்பீர்!முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், லக்னோ அணியில் இருந்து மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில், “நான் மீண்டும் திரும்பிவிட்டேன். பசியோடு இருக்கிறேன்; எனது எண் 23” என பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்துள்ள புகைப்படத்தையும் கௌதம் கம்பீர் வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர், கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளார்.

“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இதையடுத்து, ஓய்வுபெற்ற கௌதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகத் தொடர்ந்தார். இதன் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கௌதம் கம்பீர், இரண்டு ஆண்டுகளாக அந்த அணிக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். இந்த நிலையில், கௌதம் கம்பீர் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார்.

MUST READ