17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற இருந்த குஜராத்VSகொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டமானது மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 62 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 63வது லீக் போட்டி நடைபெற இருந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருந்த 63வது லீக் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை மோத இருந்தன. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் மோத இருந்த ஆட்டமானது இடைவிடாத மழைக் காரணமாக டாஸ் போடாமலேயே ஆட்டமானது ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே லீக் சுற்றுலீருந்து வெளியேறிய குஜராத் அணிக்கு இந்த முடிவானது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே சமயம் கொல்கத்தா அணியானது முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பு பிரகாசமானது.