Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!

-

- Advertisement -

 

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!
File Photo

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 70வது லீக் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 21) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.

“சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நயன் – விக்கி தம்பதி”

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, விராட் கோலி 101 ரன்களையும், டூ பிளஸிஸ் 28 ரன்களையும் எடுத்துள்ளனர்.

குஜராத் அணி தரப்பில், ஷமி, யாஷ் டயால், ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியுள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராத் அணி.

‘மைனா’ நடிகருடன் கூட்டணி அமைக்கும் சரத்குமார்!

குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் எடுத்துள்ளனர்.

பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துள்ளதால், மைதானத்தில் இருந்த அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

MUST READ