Homeசெய்திகள்விளையாட்டு7 கோடி ரூபாய் வாட்சை கையில் கட்டி... பாகிஸ்தான் மேட்சில் கெத்துக்காட்டிய ஹர்திக் பாண்டியா..!

7 கோடி ரூபாய் வாட்சை கையில் கட்டி… பாகிஸ்தான் மேட்சில் கெத்துக்காட்டிய ஹர்திக் பாண்டியா..!

-

- Advertisement -

கையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வாட்ச் கட்டி இருந்தாலே அது எங்கேயும் இடிபட்டுவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து நடந்து கொள்வோம். வாட்ச் கட்டியுள்ள கையை அசையாமல் வைத்து பாதுகாப்போம். ஆனால் 7 கோடி ரூபாய் வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு அசால்ட்டா ஒரு ஒரு நாள் கிரிக்கெட் ஆடியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. சாம்பியன்ஸ் ட்ராபி கிர்க்கெட் தொடரில் இப்போது இதுதான் ஹாட் டாபிக்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியில் இந்த 7 கோடி ரூபாய் வாட்ச்சைக் கட்டிக்கொண்டு ஆடியிருக்கார் ஹர்த்திக் பாண்டியா.

RICHARD MILLE நிறுவனத்தின் RM 27-02 வகை தயாரிப்புதான் இந்த வாட்ச். பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்காக இந்த வகை வாட்ச்சை தயாரித்த RICHARD MILLE நிறுவனம், அதன்பிறகு இந்த வகையில் மொத்தமே 50 வாட்ச்களை மட்டுமே தயாரித்துள்ளது. அதில் ஒரு வாட்ச்சைக் கட்டிக் கொண்டுதான் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஹர்த்திக் பாண்டியா விளையாடி இருக்கிறார்.

வாட்ச் கட்டியிருக்கிறோமே என ஹர்த்திக் மைதானத்தில் கவனமாக எல்லாம் நிற்கவில்லை. பல பந்துகளை டைவ் அடித்துப் பிடித்திருக்கிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆஸம் விக்கெட்டையும் வீழ்த்தினார். இப்படி 7 கோடி ரூபாய் வாட்ச்சைக் கையில் கட்டி அசால்ட்டாக கிரிக்கெட் ஆடிய ஹர்த்திக் பாண்டியாவைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்த வாட்ச் மட்டுமில்லை… 8 அறைகளைக் கொண்ட 30 கோடி ரூபாய் அபார்ட்மெண்ட், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 Patek Philippe Nautilus Platinum 5711 வாட்ச்கள், ஒன்றரை லட்ச ரூபாய் ஷூ, 1.6 லட்ச ரூபாய் பைஜாமா, 3.73 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார் என ஏகப்பட்ட காஸ்ட்லி ஐட்டங்களை வைத்திருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.

ஆரம்ப காலகட்டத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா, 5 ரூபாய் மேகி நூடுல்ஸ் சாப்பிட்டுத்தான் பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த வறுமைக் காலம் போய் இன்றைக்கு அவரை கோடீஸ்வர வாழ்க்கை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பெருமை கிரிக்கெட்டைத்தான் சேரும்.

MUST READ