Homeசெய்திகள்விளையாட்டுஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அசத்திய தோனி...வீழ்ந்தது மும்பை அணி!

ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அசத்திய தோனி…வீழ்ந்தது மும்பை அணி!

-

- Advertisement -

 

ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அசத்திய தோனி...வீழ்ந்தது மும்பை அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

மும்பையில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் 69, ஷிவம் துபே 66 ரன்களை எடுத்து அசத்தினர். அதேபோல், சென்னையின் பத்திரானா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. மும்பை அணி தரப்பில் ரோஹித் ஷர்மா 105, திலக் வர்மா 31, ரன்களை எடுக்க, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து தோனி அசத்தினார். கடைசி ஓவரில் களமிறங்கிய சென்னை வீரர் தோனி 4 பந்துகளில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.

“ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

அதேபோல், ஐபிஎல் நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா அடித்த சதம் வீணானது. மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்ததால் 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மாவின் சதம் வீணாது. ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் ஷர்மா அடித்த இரண்டாவது சதம் இதுவாகும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு- ஹைதராபாத் அணிகள் மோதுகின்றனர்.

MUST READ