டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். உலக கோப்பை தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா அசத்தலான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற அவரது பந்துவீச்சு முக்கிய காரணமாகும். இதேபோல் சூப்பர் 8 சுற்றில் ஆப்காணிஸ்தான் அணியை வீழ்த்தவும் பும்ரா பெரும் உதவியாக இருந்தார். 4 ஓவர்களில் வெறும் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது. பும்ராவின் புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி சமூக வலைதள பக்கங்களில் கவர் போட்டோவாக வைத்துள்ளது. அதாவது ஐசிசி-யின் ஃபேஸ்புக் & X பக்கங்களில் Cover Photo-ஆக பும்ராவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.