20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்திக் வெஸ்ட் இண்டீஸ்vsபப்புவா நியூ கினியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இப்போட்டிக்கான முதலாவது லீக் ஆட்டம் நேற்றுடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோவ்மன் பவல் தலைமையிலும் பப்புவா கினியா அணியானது ஆசாத் வாலா தலையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீசின் கயனாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியில் வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.