Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா- பாகிஸ்தான் மோதுவது எப்போது?- விரிவான தகவல்!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா- பாகிஸ்தான் மோதுவது எப்போது?- விரிவான தகவல்!

-

 

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா- பாகிஸ்தான் மோதுவது எப்போது?- விரிவான தகவல்!
Photo: ICC

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகிறது!

2023- ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, லக்னோ, மும்பை, புனே, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா- பாகிஸ்தான் மோதுவது எப்போது?- விரிவான தகவல்!
Photo: ICC

குறிப்பாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 5- ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. வரும் அக்டோபர் 8- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சந்திக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியானது

அக்டோபர் 15- ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றனர்.

MUST READ