Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

-

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்ர் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல் யு19 பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் உலகக்கோப்பையை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தரப்பில் கூறப்பட்டதாவது இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கம்பீர் சிறந்த நபர் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டின் பல்வேறு பரிமாணங்களை கம்பீர் நேரில் இருந்து பார்த்துள்ளார். வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை சகித்துக்கொண்டு பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

 

MUST READ