Homeசெய்திகள்விளையாட்டுஅனல் பறக்கும் ஆட்டம் - இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்!

அனல் பறக்கும் ஆட்டம் – இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்!

-

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்தது. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானும், குருப் 2 பிரிவில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி இப்போட்டியில் வெற்றி பெற்று முதலாவது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும். அதே நேரம் இந்திய அணியும் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசவுள்ளது.

MUST READ