Homeசெய்திகள்விளையாட்டுஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

-

ஜிம்பாவேvsஇந்தியா அணிகளுக்கிடையேயான முன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. இப்போட்டியில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இதற்கு அடுத்த நாளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் முன்றாவது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. இங்கு நடைபெறும் போட்டிகள் அனைத்தும் ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த ஜிம்பாவே அணி இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். அதே சமயம் இந்திய அணியானது தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஜிம்பாவே அணி முதலில் பந்துவீசவுள்ளது.

MUST READ