Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னெறியது இந்திய அணி!

இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னெறியது இந்திய அணி!

-

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது,.

டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி நேற்றிரவு 9 மணிக்கு கயானா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்போட்டியானது தொடர் மழைக் காரணமாக ஆட்டமானது ஒரு மணி நேரமாக டாஸ் போடாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் கழித்த பின்னர் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 9 ரன்களிலும் ரோகித் சர்மா 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் கிரிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 5 ரன்களிலும் ஜாஸ் பட்லர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மோயின் அலி 8 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சூழலை தாக்குபிடிக்க முடியாமல் 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் அக்‌ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணியின் ஆட்டநாயகனாக அக்‌ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

MUST READ