Homeசெய்திகள்விளையாட்டுதென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி!

தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி!

-

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியானது மேற்கிந்திய தீவுகளில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஒவல் பார்படாஸ் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும் ஏய்டன் மார்க்ராம் தலைமையில் தென் ஆப்பிரிக்கா அணியும் களம் கண்டன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 9 ரன்களும் விராட் கோலி 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன் ஏதுமின்றியும் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிஷா ஹென்ரிக்ஸ் 4 ரன்களிலும் குயிண்டன் டிகாக் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஏய்டன் மார்க்ராம் 4 ரன்களிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிஸ் கிளாசன் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ