ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. இதில் முதலாவது ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஜிம்பாவே அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும் சுப்மான் கில் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 10 ரன்களிலும் ருத்ராஜ் கெய்க்வாட் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்கள் எடுத்தது.
பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாவே அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வெஸ்லெ மாதவெரெ 1 ரன்களிலும் மருமானி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரைன் பெனட் 4 ரன்களிலும் சிக்கந்தர் ராசா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக டியான் மேயர்ஸ் 65 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.