Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

-

 

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!
Photo: ICC

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை பெரிதும் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பினாலும், அதனை மழை விரும்பவில்லை போல.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை

16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இலங்கையின் கிண்டி நகரில் உள்ள பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பின்னர், இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடி, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இஷான் கிஷன் 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் வெளியேறினர்.
இறுதியாக, இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 266 ரன்களை எடுத்தது.

சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…

பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் முன்பு மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்துச் செய்யப்பட்டு, இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது .

MUST READ