Homeசெய்திகள்விளையாட்டுபும்ரா வேகத்தில் சுருண்டது பாகிஸ்தான் அணி - இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்...

பும்ரா வேகத்தில் சுருண்டது பாகிஸ்தான் அணி – இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இப்போட்டிக்கான முதலாவது லீக் ஆட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் பாகிஸ்தான் அணியானது பாபர் அசாம் தலையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 13 ரன்களிலும் விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 42 ரன்களிலும் அக்‌ஷர் பட்டேல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 31 ரன்களிலும் பாபர் அசாம் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய உஷ்மான் கான் 13 ரன்களிலும் பக்கார் ஜமான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 113 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ