Homeசெய்திகள்விளையாட்டுஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

-

- Advertisement -
kadalkanni

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னெறி அசத்தியுள்ளது.

ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலாவது பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் அதிகபட்சமாக நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சு தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 81 ரன்கள் ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சவாலி வெர்மா 26 ரன்களிலும் ஸ்மிரிதி மந்தனா 55 ரன்களும் எடுத்து அணியை எளிதில் வெற்றிப்பெறச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதலாவது அணியானக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

 

 

 

MUST READ