
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடிக் காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
“மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்”- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
உலகக்கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா, ஆறு சிக்ஸர்கள் உட்பட 86 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில், பாகிஸ்தான் அணியின் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர் கிறிஸ்கெயில் 331 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 302 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
“கனிமொழி பேச்சால் அண்ணனாகப் பெருமைப்படுகிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
டெஸ்ட், டி20, ஒருநாள் என்ற மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மாவிடமே உள்ளது. அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 474 இன்னிங்ஸில் விளையாடி 562 சிக்ஸர்களை அடித்து, முதலிடத்தில் உள்ளார்.