Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரஹானே குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரஹானே குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

 

Photo: ICC

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களின் ஒருவரான அஜிங்கியா ரஹானே, இன்று (ஜூன் 06) 35- வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவர் கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அஷ்வி குர்த் என்ற கிராமத்தில் பிறந்தவர் அஜிங்கியா ரஹானே. அவரது தந்தை ரஹானேவை சிறுவதிலே கராத்தா பயிற்சியில் சேர்த்தார். நன்கு கராத்தே பயின்ற ரஹானே பிளாக் பெல்ட் வென்றார். அதைத் தொடர்ந்து சிறு வயது முதலே கிரிக்கெட் போட்டி மீது ஆர்வம் கொண்டிருந்த ரஹானே தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

இந்த நிலையில், தன்னுடைய சிறுவயது தோழியான ராதிகா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2014- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆர்யா, ராகவ் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

கடந்த 2013- ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ரஹானே, அந்த தொடரில் விளையாடி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை!

இதுவரை 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 12 சதங்கள், 25 அரை சதங்களை அடித்து 4,931 ரன்களை குவித்துள்ளார். அதேபோல், 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3 சதங்கள், 24 அரை சதங்களை அடித்து 2,962 ரன்களைக் குவித்துள்ளார். 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 375 ரன்களையும், 172 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 4,400 ரன்களையும் எடுத்துள்ளார்.

தன்னுடைய அதிரடி ஆட்டத்தால், இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் ரஹானே, கிரிக்கெட் போட்டிக்கு நடுவே தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ