Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் 'அடிடாஸ்' நிறுவனம்!

இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் ‘அடிடாஸ்’ நிறுவனம்!

-

 

இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் 'அடிடாஸ்' நிறுவனம்!
Photo: India Cricket Team

இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான உடைகள் மற்றும் போட்டிகளுக்கு தேவையான பொருட்களை அடிடாஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அந்நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பி.சி.சி.ஐ. (BCCI) கையெழுத்திட்டுள்ளது.

வணிக வளாகத்தில் மின் கசிவால் தீ விபத்து

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், 19 வயது உட்பட்டோருக்கான அணியில் விளையாடுபவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடிடாஸ் நிறுவனம் பொருட்களை வழங்கும். உலகின் பல்வேறு நாட்டு விளையாட்டு அணிகளுக்கும் அடிடாஸ் நிறுவனம் (Adidas) தான் உடைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் திடீர் மறியல் – போக்குவரத்து பாதிப்பு

ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், டி-சர்ட்டுகள், பேண்டுகள், வாட்ச், காலணிகள் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் நிறுவனம். உலகில் உள்ள ஆடைத் தயாரிக்கும் நிறுவனங்களில், அடிடாஸ் நிறுவனத்திற்கு என்று தனி அடையாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ