ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்…. முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காயம்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அந்த தொடரை முடித்துக் கொண்டு, அயர்லாந்துக்கு செல்லும் இந்திய அணி, வரும் ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 23 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்குத் தேர்தல்!
கடந்த 2007- ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு சென்ற இந்திய அணி ஒருநாள் போட்டியிலும், 2018, 2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு டி20 தொடரிலும் விளையாடியுள்ளது. அதைத் தொடர்ந்து, நான்காவது முறையாக அயர்லாந்துக்கு செல்லும் இந்திய அணி மூன்றாவது டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.