Homeசெய்திகள்விளையாட்டு"இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்"- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!

“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!

-

 

"இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்"- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
File Photo

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தாயகம் திரும்புவோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் : தமிழக அணி டிராபி வென்று அசத்தல்..

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்பாக பாபர் அசாம் லாகூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தியாவில் உள்ள மைதானங்களில் நாங்கள் விளையாடியதில்லை என்றாலும், அங்குள்ள சூழல் மற்றும் ஆடுகளங்களின் தன்மை ஆராய்ந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குழு அமைத்த தமிழக அரசு- வாபஸ் பெற ஆளுநர் உத்தரவு!

இதனால் சவால்களை எதிர்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை வழிநடத்துவதை தாம் பெருமையாகக் கருதுவதாகக் கூறிய பாபர் அசாம், அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்றார்.

MUST READ