Homeசெய்திகள்விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

-

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16 பெங்களூருவிலும்,  2வது போட்டி புனோவில் அக. 24ம் தேதியும் தொடங்குகின்றன. கடைசி டெஸ்ட் நவம்பர் 1ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு,  ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி
ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப்யாதவ், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஆகாஷ்தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக  ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

MUST READ