Homeசெய்திகள்விளையாட்டுமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

-

 

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
Photo: ICC

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 16- ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜூலை 20- ஆம் தேதி முதல் ஜூலை 24- ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
Photo: BCCI

அதேபோல், ஜூலை 27, ஜூலை 29, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ