Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்: இந்தியா செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்: இந்தியா செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்

-

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு முறையில் நடைபெற்றது. இளஞ்சிவப்பு பந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது நாளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபாவில் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலை பெற வேண்டுமானால், நான்கு முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அடிலெய்டில் ராணாவால் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததால், ஹர்ஷித் ராணாவை நீக்கி விட்டு ஆகாஷ் தீப்பை அணியில் கொண்டு வர வேண்டும். ராணா இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனமாக இருந்தார். முதல் இன்னிங்சில் ஹர்ஷித் ராணா 16 ஓவர்களில் 5.37 சராசரியில் 86 ரன்கள் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் ரோஹித் சர்மா அவரை பந்துவீச அனுமதிக்கவில்லை.

அடிலெய்டில் ஒரு ஆல்-ரவுண்டராக, ரவிச்சந்திரன் அஸ்வின் 14 பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே நேரத்தில், பந்துவீச்சில், அவர் 18 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இந்தியாவின் ஒரே சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அடுத்த போட்டியில் அஷ்வினை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை மீண்டும் அணிக்கு கொண்டுவர வேண்டும்.

சர்ஃபராஸ் கான் அல்லது துருவ் ஜூரல் போன்ற இளம் பேட்ஸ்மேன்களுக்கு வழிவிட வேண்டும். கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மாவின் சாதனைகளை பார்த்தால் மிகவும் மோசம். ஆனால் அவர்தான் அணியின் கேப்டன். அவர் விளையாடுவது உறுதி. அவர் அடுத்த போட்டியில் விளையாடினால், அவர் இன்னிங்ஸை தொடங்க வேண்டும், ஏனெனில் அவர் ஆறாவது எண்ணில் முற்றிலும் தோல்வியடைந்தார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், குறிப்பாக விராட் கோலி, தங்கள் நிலையை உணர்ந்து நீண்ட நேரம் கிரீஸில் இருக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம்தான் ஆஸ்திரேலியர்களை வெல்ல முடியும். சில சமயங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பந்துகளில் 20-30 ரன்கள் எடுப்பது 70-80 ரன்கள் எடுப்பது போன்றது.

MUST READ