
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நடந்த போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.
எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!
இலங்கை கண்டியில் உள்ள பல்லேகேலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய நேபாளம் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
பின்னர் இந்திய அணி விளையாடிய போது, மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மீண்டும் போட்டி தொடங்கி இந்தியாவுக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 23 ஓவராக குறைக்கப்பட்டப் போட்டியில், இந்திய அணி 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விரைவில் தொடங்குகிறதா?….. சூர்யா, வெற்றி மாறன் கூட்டணியின் வாடிவாசல்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 74 ரன்களையும், சுப்மன் கில் 67 ரன்களையும் எடுத்தனர்.