உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.29) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்க்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களையும், கே.எல்.ராகுல் 39 ரன்களையும் எடுத்தனர்.
லஞ்ச ஒழிப்பு வாரம் – கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி
அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3, க்ரிஸ்வோக்ஸ், அடில ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 34.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.