அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் (Dublin) நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய அயர்லாந்து அணி, இந்திய அணி வீரர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை அயர்லாந்து அணி எடுத்தது.
இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!
பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஜெய்ஷ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா முதல் பந்திலே டக்அவுட் ஆனார். இந்திய அணி 6.5 ஓவர்களில் 47 ரன்களை எடுத்த போதும், மழைக் குறுக்கிட்டது. மழை தீவிரமடைந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 2 ரன்களில் வெற்றி பெற்றது.