Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

-

 

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!
Photo: ICC

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை வீழ்த்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!

இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது. 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை எடுத்தது இந்திய அணி.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்களையும், கே.எல்.ராகுல் 39 ரன்களையும், இஷான் கிஷன் 33 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர், 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

MUST READ