
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிக் பாஸ் வீட்டில் அனன்யாவின் ரீ என்ட்ரி….. மாயாவிற்கு விஷ பாட்டில் பட்டம்…. அடுத்தது என்ன?
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், ஜெய்ஸ்வால் 53, இஷான் கிஷன் 52 ரன்களை எடுத்தனர்.
பின்னர், 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ் 45 ரன்களையும், கேப்டன் மேத்யூ வேட் 42 ரன்களையும், டிம் டேவிட் 37 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், அர்ஷிதீப் சிங், அக்சர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், ரவி பிஸ்னோய், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போலீசாக நடிக்கும் பிரபாஸ்..? அர்ஜுன் ரெட்டி பட இயக்குனருடன் கூட்டணி!
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் உள்ளது.