வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வரால், சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆல் ரவுண்டர்கள் ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அணியில் தேர்வாகியுள்ளனர். மேலும், பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.